ஹுங்கமவில் மீனவர் சடலமாக மீட்பு!

9 0

ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலமெட்டிய பகுதியில் குளத்து நீரில் மிதந்த நிலையில் மீனவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலாமாக மீட்கப்பட்டவர் தனது சொந்த படகில் நேற்று புதன்கிழமை (16) அதிகாலையில் குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.  இந்நிலையிலேயே மாலை வேளை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீனவர் உயிரிழந்தமைக்கான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகளை ஹுங்கம பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.