ஈரானின் அணு நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது- அமெரிக்கா தகவல்

18 0

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான், இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதில் ஈரானின் அணு நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது.

இதற்கிடையே அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, `சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன்-இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இடையேயான பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் ஒரு உறுதியை அளித்துள்ளது.

ஈரானின் அணு நிலையம் தாக்குதல் மற்றும் கச்சா எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று உறுதியளித்துள்ளது. ஈரானின் ராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது’ என்றார்.