டிரோன்கள் மூலம் உக்ரைன் மீது சரமாரி தாக்குதல் நடத்திய ரஷியா

15 0

உக்ரைன் பகுதிகளை குறிவைத்து ரஷியா இன்று டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. சுமார் 130 டிரோன்கள் உக்ரைனின் கீவ் மற்றும் பல நகரங்களை குறிவைத்து செலுத்தப்பட்டுள்ளது. மேலும், இரண்டு ஏவுகணைகள் கொண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைனின் வான் பாதுகாப்பு சிஸ்டம் 136 டிரோன்களில் 68 டிரோன்களை தடுத்து அழித்துள்ளது. இரண்டு டிரோன்கள் மீண்டும் ரஷியா பகுதிக்கு சென்றுள்ளது. 64 டிரோன்கள் குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை என உக்ரைன் தெரிவித்துள்ளது.டெர்னோபில் வடக்கு பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்று டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகி தீப்பிடித்து எரிந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களில் ரஷியாவின் மிகப்பெரிய டிரோன் தாக்குதல் இதுவாகும். ரஷியாவின் படையெடுப்பை தடுப்பதற்கான திட்டத்தை ஜெலன்ஸ்கி வெளியிடுவதற்கு முன்பாக ரஷியா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.இந்த டிரோன் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இரண்டு ஏவுகணைகளை வடக்கு செர்னிஹிவ் மற்றும் கிழக்கு டொனட்ஸ்க் பிராந்தியத்தில் செலுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை