நைஜீரியாவில் எரிபொருள்பார ஊர்தி வெடித்துசிதறியதில் 95 பேர் பலி

40 0

நைஜீரியாவில் எரிபொருள்நிரப்பப்பட்ட பாரஊர்தி வெடித்துசிதறியதில் 95 கொல்லப்பட்டுள்ளனர்.

விபத்தொன்றை தொடர்ந்து சிந்திய எரிபொருளை சேகரிக்க முயன்றவர்களே வாகனம் வெடித்துசிதறியதில் உயிரிழந்துள்ளனர்.

 

நைஜீரியாவின் ஜிகாவா மாநிலத்தின் மஜியா என்ற கிராமத்தில்  எரிபொருள் நிரம்பிய பாரஊர்தியின் கட்டுப்பாட்டை சாரதிஇழந்ததை தொடர்ந்து அது விபத்துக்குள்ளாகி கால்வாய் ஒன்றிற்குள் விழுந்தது அதிலிருந்து சிந்திய எரிபொருளை  எடுப்பதற்காக பெருமளவு மக்கள் முண்டியடித்தவேளை அந்த வாகனம் வெடித்துசிதறியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

95 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதால் உயிரிழந்தவர்களின்   எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.