அயோத்தியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் உள்பட 10 விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அயோத்தியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் உள்பட 10 விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்மை காலமாக விமானங்கள்இ பள்ளிகள் என பல்வேறு இடங்களில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் மின்னஞ்சல் வருகிறது. இதுதொடர்பாக தகவலின்பேரில் ஆய்வு செய்து பார்த்தால்இ அவை வெறும் புரளி என்பது தெரிகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானம் பெங்களூரு நோக்கிஇ 130 பயணிகளுடன் சென்றது. அப்போது ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக செல்போன் அழைப்பு வந்தது. இதையடுத்து விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே விமானஇ விமானத்தை அகமதாபாத்தில் தரையிறக்குவதற்கு முடிவு செய்தார். இதற்காக விமான உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்ப கொண்டு அவசரகால தரையிறக்கத்திற்கு அனுமதி கேட்டார்.
அத்றகு அனுமதி உடனடியாக வழங்கப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் அவசர அவசரமாக அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டனர். மேலும் விமானத்தில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆய்வு செய்தனா். ஆனால் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. அப்போது தான் அது வெறும் புரளி என்பது தெரிந்தது. இதையடுத்து விமானம் பயணிகளை ஏற்றி கொண்டு மீண்டும் புறப்பட்டு சென்றனா்.
இதேபோல் கடந்த 48 மணி நேரத்தில் ஒட்டுமொத்தமாக 10 இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் விமான பயணிகள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனா். இதனால் பதற்றம் அதிகாித்து காணப்படுகிறது. இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனா்.