கொழும்பு கிராண்ட்பாஸ் – மாதம்பிட்டிய பிரதேசத்தில் இன்று (16) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாதம்பிட்டி மயானத்துக்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
அவ்வழியே முச்சக்கரவண்டியில் பயணித்த 35 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.