கேகாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு – கண்டி வீதியில் மொலகொட பிரதேசத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த நபரொருவரை அடையாளம் காணுவதற்கு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
05 அடி 03 அங்குலம் உயரமுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
சடலமானது ஹோமாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் கேகாலை பொலிஸ் நிலையத்தின் 07185 91413 அல்லது 035222 2222 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்தனர்.