ஒரு கோடி ரூபா பெறுமதியான விஸ்கி போத்தல்கள், வெளிநாட்டு சிகரட்டுகளுடன் கட்டுநாயக்கவில் வர்த்தகர் கைது

25 0

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான விஸ்கி போத்தல்கள் மற்றும் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான வர்த்தகர் துபாயிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 05.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான வர்த்தகர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 69 விஸ்கி போத்தல்கள் மற்றும் 2,380 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.