வலுபெற்றுவரும் கொரிய நாடுகளுக்கு இடையிலான அரசியல் மோதல்களுக்கு மத்தியில், தென்கொரியாவுடனான முக்கிய இணைப்புப்பாதைகளை வடகொரியா வெடிக்க செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமது நாட்டு வான்பரப்புக்குள் தென்கொரியா ட்ரோன்களைப் ஏவியதற்காக இந்த பதிலடி வழங்கப்பட்டுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது.
வடகொரிய இராணுவம் கடந்த வாரம் அதன் தெற்கு எல்லையை நிரந்தரமாக மூடுவதாக உறுதியளித்திருந்தது.
இந்த உறுதியளிப்பின் பின்னர் அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் தென்கொரியாவை தனது நாட்டின் முதன்மை எதிரி என்று பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.
இந்நிலையில் தமது அறிவிப்புக்கு எதிராக தென்கொரியா ட்ரோன்களைப் தமது நாட்டு வான்பரப்புக்குள் ஏவியதாக கிம் ஜாங் உன் அறிவித்திருந்தார்.
அதற்குப் பதிலடி வழங்கும் நோக்கோடு “உடனடி இராணுவ நடவடிக்கை” திட்டத்தை இயக்குவதற்கு கிம் ஒரு பாதுகாப்புக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார்.
இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய எல்லை பிராந்திய பாதைகளான கியோங்குய் மற்றும் டோங்ஹே சாலைகளின் சில பகுதிகளை வட கொரிய வெடிக்கசெய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் இரு நாட்டு முறுகலை மேலும் வலுப்படுத்தியுள்ளது.