நெதர்லாந்தில் Almere பிரதேசத்தில் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்.

122 0

நெதர்லாந்தில் Almere பிரதேசத்தில் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், 2ஆம் லெப்ரினன் மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வும் 12-10-2024 சனிஅன்று மிகவும் உணர்வுப்பூர்வமாக நினைவுகூரப்பட்டது.பொதுச்சுடரேற்றப்பட்டு பின் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து பொது ஈகைச்சுடரும் தொடர்ந்து 2ம் லெப்ரினன் மாலதி அவர்களின் திருவுருவப் படத்திற்கும் லெப்.கேணல் குமரப்பா,லெப்.கேணல் புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைகளின் திருவுருவப் படத்திற்கும் லெப்.கேணல் சந்தோஷம், லெப்.கேணஸ் நாதன், கப்ரன் கஜன், கேணல். ராயூ ஆகிய மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கும். ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து

அகவணக்கம் செலுத்தப்பட்டு அதன்பின் அனைத்து மாவீரர்களின் திருவுருவப் படங்களிற்கும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து எழுச்சிப் பாடல்கள் நினைவுக் கவிதைகள் நினைவுரைகள் எழுச்சி நடனங்கள் என்பனவும் இடம்பெற்றன. நெதர்லாந்து பெண்கள் அமைப்பினரால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு சுமார் 18:00 மணியளவில் நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற பாடலைத் தொடர்ந்து எமது தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கோசத்துடன் இனிதே நிறைவடைந்தது.