கொழும்பில் பிரபல வர்த்தகர் ரணில் விலத்தரகே பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டி

11 0

இலங்கையின் முன்னணி ஆடை வர்த்தக நாமமான Gflock இன் தலைவர் ரணில் விலத்தரகே, பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.

ரணில் வில்லத்தரகே Gflock வர்த்தக நாமத்தின் கீழ் சமூக நலனை முதன்மைப்படுத்தும் வணிக மாதிரியை அறிமுகப்படுத்திய பிரபல தொழில்முனைவோர் ஆவார்.

சிலிண்டர் சின்னத்தில் கொழும்பு மாவட்ட தலைவராக முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவின் தலைமைத்துவத்தின் கீழ் அவர் போட்டியிடவுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார வேலைத்திட்டத்திற்கு ஆதரவளித்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்ட ரணில் வில்லத்தரகே கெஸ்பேவ வலய அமைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.