வட அமெரிக்கா இடையே பசிபிக் கடலில் கோஸ்டாரிகா என்ற தீவு நாடு உள்ளது. இன்று அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் சான்ஜோஸ் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.இங்கு பூமிக்கு அடியில் 18 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
6.2 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை .