பாதுகாப்பு அமைச்சின் செயலாளரைச் சந்தித்தார் சீனத் தூதுவர்

23 0

கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (11) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தவை (ஓய்வு) இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹோங்  சந்தித்தார்.

சம்பத் துய்யகொந்தவுக்கும் சீனத் தூதுவருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

சந்திப்பின் போது தூதுவருடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக்கொண்டார்.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்மன் டி கோஸ்டாவும் கலந்து கொண்டார்.