ரஷ்யாவுடன் கூட்டு நடவடிக்கை – அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்கிறது அமெரிக்கா

342 0

america-russia-flagசிரியாவில் ரஷ்யாவுடன் இணைந்து மேற்கொள்ளக்கூடிய கூட்டு நடவடிக்கை தொடர்பில் அடுத்த மாத ஆரம்பித்தில் அறிவிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இதனைத் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து இராணுவ மற்றும் புலனாய்வு நடவடிக்கைளை முன்னெடுப்பது குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த பேச்சுவார்த்தைகள் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்த கூட்டு நடவடிக்கை குறித்த அடுத்த மாதம் ஆரம்பத்தில் அறிவிக்கக்கூடியதாக இருக்கும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சிரியாவுக்கான ஐக்கிய நாடுகளின் தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார்.