மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 அரசியல் கட்சிகள், 27 சுயேச்சைக் குழுக்கள் போட்டி

21 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்குக் கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் உட்பட 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது இதில் ஒரு கட்சி 6 சுயேச்சைகுளுக்கள் உட்பட 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் 22 கட்சிகள் 27 சுயேச்சைக்குழுக்கள் உட்பட 49 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் 392 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக மட்டு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பழைய கச்சேரி மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (11) தேர்தல் வேட்புமனு தொடர்பாக இடம் பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலட்சத்து 49  ஆயிரத்து 686 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் 442 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கப்படவுள்ளது

இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல்  ஒக்டோபர் மாதம் 4ம் திகதி தொடக்கம் 11ம் திகதி நண்பகல் 12 மணிவரை பாரம் எடுக்கப்பட்டது. இதில்  23 கட்சிகள் 33 சுயேச்சைக்குழுக்கள் உட்பட 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது

இவற்றில் ஒரு கட்சி ஆறு சுயேச்சைக்குழு உட்பட 7 வேப்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதுடன் 22 கட்சிகள் 27 சுயேச்சைக் குழுக்கள் உட்பட 49 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என அவர் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த 2020 ம் ஆண்டு தேர்தலில்  மாவட்டத்தில்; 5 பிரதிநிதிகளை தேரந்தெடுப்பதற்கு 16 கட்சிகளும் 22 சுயேச்சைக்குளுக்ளைச் சேர்ந்த 304 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.