அத்தனகலு ஓயா, உறுவல் ஓயாவைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ளம்

14 0

கடும் மழையுடனான வானிலை காரணமாக அத்தனகலு ஓயா மற்றும் உறுவல் ஓயாவைச் சூழவுள்ள பகுதிகள் சில வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கம்பஹா – ஜா எல வீதி, ஒருதொட்ட வீதி, கம்பஹா வைத்தியசாலை வீதி, கம்பஹா – யக்கலை வீதி, ஜா எல வீதி பஸ் தரிப்பிடம் ஆகிய பகுதிகளே வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக, இந்த பகுதிகளில் உள்ள விற்பனை நிலையங்கள், மேலதிக வகுப்புகள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கம்பஹா நகரத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.