மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவை திருடிய வைத்தியசாலையில் 51 வயதுடைய சிற்றூழியர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (11) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவதினமான கடந்த வியாழக்கிழமை (10) இரவு சிற்றூழியர் திருடிய காட்சிகள் சிசிரி கமராவில் பதிவாகியுள்ளது.
இதனை அவதானித்த வைத்தியசாலை நிர்வாக பணிப்பாளர் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த நபரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.