யாழ். சுழிபுரத்தில் கசிப்புடன் ஒருவர் கைது!

14 0

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் இன்று சனிக்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

இளவாலை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த  நபர் கசிப்பினை எடுத்துச் சென்றவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.