மீள திறக்கப்பட்ட வீதியின் பாதுகாப்பு சாவடிகள் அகற்றம்

20 0

அலரி மாளிகைக்கு அருகில் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் இருந்து ரொட்டுண்டா சுற்றுவட்ட வீதிக்கு செல்லும் வீதி பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து, வீதியின் இருபுறமும் இருந்த பாதுகாப்பு சாவடிகள் கொழும்பு மாநகரசபையால் இன்று (11) அகற்றப்பட்டன.

கடந்த 2005ம் ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வீதி 19 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம், நீண்டகாலமாக பயணிக்க முடியாத நிலையில் காணப்பட்ட இந்த வீதியை தற்போதைய பாதுகாப்பு நிலைமையை ஆராய்ந்த பின்னர் மீண்டும் திறக்குமாறு புதிய அரசாங்கம் ஆலோசனை வழங்கியது.