துவிச்சக்கர வண்டி – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து ; ஒருவர் பலி !

24 0

துவிச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ,   துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (10) தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அனுராதபுரம் பண்டுகாபயபுர , பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 96 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பரசன்கஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அநுராதபுரம் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கோனேவ சந்தியின் இடதுபக்கத்தில் பண்டுகாபயபுர பகுதியில் ,அனுராதபுரத்திலிருந்து பண்டுகாபயபுர நோக்கி பயணித்த துவிச்சக்கரவண்டிக்கு எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள், நேருக்கு நேர்  மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் ரம்பேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் ரம்பேவ வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பரசன்கஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.