ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் உக்ரைன் ஜனாதிபதி, நாளை ஜேர்மன் சேன்ஸலரை சந்திக்க இருக்கிறார்.
உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, நாளை வெள்ளிக்கிழமை ஜேர்மனி செல்ல இருக்கிறார்.
தனது ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக ஜேர்மனி செல்லும் ஜெலன்ஸ்கி, ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸையும், ஜேர்மன் ஜனாதிபதியான ஃப்ராங்க் வால்ட்டர் ஸ்டெய்ன்மெயரையும் சந்திக்க இருக்கிறார்.
ஜேர்மனியின் Ramstein நகரில் நடைபெற இருந்த உச்சி மாநாடு ஒன்றில் தனது கூட்டாளர்களை சந்திக்க ஏற்கனவே ஜெலன்ஸ்கி திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அமெரிக்காவில் புயலைக் காரணம் காட்டி ஜோ பைடன் ஜேர்மன் பயணத்தை தள்ளிவைத்துவிட்டதால் ஜெலன்ஸ்கியின் திட்டம் நிறைவேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.