அரச வாகனங்கள் தொடர்பில் வௌியான அதிர்ச்சியான செய்தி!

23 0

அரச அதிகாரிகள் பயன்படுத்தும் உத்தியோகபூர்வ வாகனங்களை முறையாக பராமரிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ஐந்து வருடங்களில் வாகனங்களை மாற்றுவதற்குப் பதிலாக, அவற்றைப் பராமரிப்பதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Derana REBUILD SRI LANKA நிகழ்ச்சியின் போது, ​​அரசாங்கத்திற்குச் சொந்தமான தொண்ணூறு ஆயிரம் வாகனங்களில் நான்காயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் தகுதியற்ற நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.