பதுளையில் வடிவேல் சுரேஷ் வேட்பு மனு தாக்கல்

46 0

ஐக்கிய ஜனநாயக குரல் சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வியாழக்கிழமை (10) காலை பதுளை மாவட்ட செயலகத்தில் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

வியாழக்கிழமை (10) கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புதிய கட்சியாக ஐக்கிய ஜனநாயக குரல் என்ற கட்சி அங்குராட்பணம் செய்து வைக்கப்பட்டது.

இக் கட்சியின் ஒலிவாங்கி சின்னம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இன்று காலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டிருந்தார்.