வன்னி மாவட்டத்தில் பாராளுமன்றத்தேர்தலுக்கான வேட்புமனுவினை மக்கள் போராட்ட முன்னணி வியாழக்கிழமை (10) தாக்கல் செய்தது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் முன்னிலைசோசலிசக்கட்சி,புதிய ஜனநாயக மாக்ஸ்சிசலெனினிசகட்சி, சோசலிசமக்கள் மன்றம், காலிமுகத்திடல் போராட்டக் குழு ஆகியன இணைந்து மக்கள் போராட்ட முன்னணியாக நாடுமுழுவதும் குடை சின்னத்தில் போட்டியிடுகின்றது.
இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலயத்தில் வியாழக்கிழமை (10) மாலை வேட்புமனுவினை தாக்கல் செய்தது.
இதன்போது முன்னணியின் முக்கியஸ்தர்கள் வருகைதந்திருந்தனர்.