70 வயது முதியவர் ஒருவரை கழுத்து நெரித்து கொலை செய்துவிட்டுத் தலைமறைவாக இருந்த சந்தேக நபரொருவர் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கலபிட்டமட பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் ஒருவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், முதியவரின் அயல் வீட்டில் வசிக்கும் நபரொருவரினால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து , சந்தேக நபரான அயல் வீட்டில் வசிக்கும் நபர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று, 2022 ஆம் ஆண்டு மீண்டும் நாடு திரும்பியுள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்துள்ளார்.
பின்னர், இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.