காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் – 28 பேர் பலி

24 0

மத்திய காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பாடசாலை மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என மருத்துபணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காசாவின் டெய்ர் அல் பலாவில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் என செம்பிறை குழு தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன செம்பிறை குழுவின் தலைமையகத்திற்கு அருகில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை அந்த பகுதியில் செயற்பட்ட பயங்கரவாதிகளை இலக்குவைத்து துல்லியமான தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.