கொழும்பு துறை­முகத்தை வந்தடைந்தது இத்தாலி கடற்படை கப்பல்

18 0

இத்தாலி கடற்படைக்குச் சொந்தமான  ‘PPA MONTECUCCOLI’ கப்பல் இன்று வியாழக்கிழமை (10) காலை கொழும்பு துறை­முகத்தை வந்தடைந்துள்ளது.

143 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் சுமார் 152 பணியாளர்கள் கடமை புரிகின்றனர்.

கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி அலெசாண்ட்ரோ ட்ரோயா  ஆவார்.

கப்பலானது எதிர்வரும் 13 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து மீண்டும் புறப்படவுள்ளது.