அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளைத் தளபதி – இலங்கை கடற்படை தளபதி இடையில் சந்திப்பு

21 0

அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலர், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் பிரியந்த பெரேராவை இன்று வியாழக்கிழமை (10) சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கை கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் பிரியந்த பெரேரா, அமெரிக்க பசுபிக் கப்பற்படை கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலருக்கு பரிசுகளையும் வழங்கினார்.

இதன்போது, அமெரிக்க பசுபிக் கப்பற்படை கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலருக்கும் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் பிரியந்த பெரேராவுக்கும் ஏனைய உயர் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இவர் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவும், கடல்சார் கள விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் பேரனர்த்தங்களின் போதான பதிலளிப்பு நடவடிக்கைகளிலும் ஒத்துழைப்பினை பலப்படுத்துவதற்காகவும், நாடுகடந்த அச்சுறுத்தல்களை முறியடிப்பதில் இலங்கைக்கு உதவி செய்வதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீள வலியுறுத்துவதற்காகவும், மற்றும் அமெரிக்க மற்றும் இலங்கை இராணுவங்களுக்கிடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பு தொர்பாகவும் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

4 நட்சத்திர அமெரிக்க கடற்படை அட்மிரலும் அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியுமான  அட்மிரல் ஸ்டீவ் கேலர், அமெரிக்க கப்பற்படைகள் தலைமையகத்தில் கப்பற்படை பயிற்சிகளுக்கான பணிப்பாளராகவும்; அமெரிக்க இந்தோ-பசிபிக் தலைமையகத்தில் தொழிற்பாடுகளுக்கான பணிப்பாளராகவும் (J3); அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் பிரதி கட்டளைத்தளபதியாகவும்; அமெரிக்க 3ஆவது கப்பற்படையின் கட்டளைத்தளபதியாகவும், மற்றும் Joint Staff இன் மூலோபாயம், திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கான பணிப்பாளராகவும் (J5) பணியாற்றியுள்ளார்.

இவர் கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத்தளபதியாக பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.