மசாஜ் என்ற போர்வையில் விபச்சார விடுதி!

22 0

நுவரெலியாவில் சமூக பிறழ்வான ரீதியில் நடத்தப்பட்ட மசாஜ் நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதிமன்றில் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

குறித்த மசாஜ் நிலையத்தில் நேற்று முன்தினம் (08) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐந்து பெண்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர் அடங்கலாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களை நேற்று (09) முன்னிலைபடுத்திய போது அனைவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நுவரெலியா – பதுளை பிரதான வீதியோரத்தில் சமூக பிறழ்வான ரீதியில் நடத்தப்பட்ட மசாஜ் நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதிக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே அந்த விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது, ஐந்து பெண்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர் அடங்கலாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா பொலிஸ் குழுவினர் இணைந்து குறித்த விடுதிக்கு பொலிஸார் ஒருவரை சிவில் உடையில் அனுப்பி உரிமையாளரிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் அந்த இடம் தொடர்பில் உறுதிபடுத்தப்பட்ட நிலையிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்கள் வெளிமடை, மொனராகலை, கொழும்பு, அநுராதபுரம் மற்றும் மாத்தளை போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவித்த பொலிஸார், அவர்கள் அனைவரும் 32 – 47 வயது எல்லைக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.