நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகஹவத்த பகுதியில் நேற்று பிற்பகல் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பம்பரகஹவத்த பிரதேசத்தை சேர்ந்த 42 வயதானவர் என தெரியவந்துள்ளது.
கைதான சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.