அதிகரிக்கும் இணையவழி மோசடிகள் ; 9 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு

12 0

இவ்வருடத்தின் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இணையவழி குற்றங்கள் தொடர்பில் 9 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.

இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் பொறியியலாளர் சாருக தமுனுபொல இது தொடர்பில் தெரிவிக்கையில்,

80 சதவீதமான முறைப்பாடுகள் சமூக ஊடகங்களுடன் தொடர்புடையவவை ஆகும். அதன்படி, இணையவழி மோசடி தொடர்பில் 1,400 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், 85 முறைப்பாடுகள் சிறுவர்கள் மீதான இணைய அச்சுறுத்தல்களுடன் தொடர்புடையவை என்பதுடன், 40 முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடையவை ஆகும்.

இணையவழி ஊடாக பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கான  நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகளை அதிகரிக்க வேண்டடியதன் அவசியத்தை  இந்த அறிக்கை  சுட்டிக்காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.