20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கும் உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டிடம்

11 0

“உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டிடமான ரீஜென்ட் இன்டர்நேஷனலின் கண்கவர் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சீனாவின் கியான்ஜியாங் செஞ்சுரி சிட்டியில் அமைந்துள்ள இந்த 675 அடி உயர கட்டடக்கலை அதிசயம் ஆரம்பத்தில் உயர்தர ஓட்டலாக கட்டப்பட்டது.

ஆனால் பின்னர் அது ஒரு விரிவான அடுக்குமாடி வளாகமாக மாற்றப்பட்டது. S வடிவிலான ரீஜண்ட் இன்டர்நேஷனல் 1.47 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது மற்றும் அதன் 39 அடுக்குமாடி குடியிருப்புகளில் 20,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வசிக்கின்றனர்.

இதன் கட்டமைப்பு வசதிகள் குடியிருப்பாளர்களின் அன்றாட தேவைகளை வளாகத்தை விட்டு வெளியேறாமல் பூர்த்தி செய்கிறது.இந்த வளாகத்தில் ஷாப்பிங் சென்டர்கள், உணவகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன.கட்டிடத்திற்குள் உள்ள அதிநவீன உடற்பயிற்சி மையங்கள், உணவு கோர்ட், உட்புற நீச்சல் குளங்கள், மளிகைக் கடைகள், முடிதிருத்தும் கடைகள், நெயில் சலூன்கள் மற்றும் தோட்டங்கள் ஆகியவற்றை குடியிருப்பாளர்கள் அனுபவிக்கின்றனர்.? More than 20,000 people are living in this world’s biggest residential building in China. pic.twitter.com/O3nBToayx4— Indian Tech & Infra (@IndianTechGuide) October 6, 2024 “,