மத்திய குற்றப்பிரிவில் செந்தில் பாலாஜி ஆஜர்

56 0

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு 471 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு, கடந்த மாதம் 26-ம் தேதி உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி இந்த மாதத்தின் முதல் சனிக்கிழமையான நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் விசாரணை அதிகாரி முன் ஆஜரானார். தனது சொந்தவாகனத்தில் தனியாக வந்தசெந்தில் பாலாஜியிடம், அதிகாரிகள் கையெழுத்து பெற்றனர்.