பாதெனிய – அநுராதபுரம் வீதியில் தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளது.
தனியார் பஸ் ஒன்று வீதியில் பயணித்த மற்றுமொரு பஸ்ஸை கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது, இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.