புத்தளம் – சிலாபம் வீதியில் விபத்து ; ஒருவர் படுகாயம்

7 0

புத்தளம் – சிலாபம் வீதியில் கிரியன்கல்லி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (04) இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்க சொந்தமான பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிள் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.