ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டணியாக கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட தீர்மானம்

31 0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்தியச் செயற் குழு என்பன கூடி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக மாத்திரமே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியுடன் புதிய சின்னத்தில் போட்டியிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.