பியூமி ஹன்சமாலியின் சொகுசு வாகனம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை!

26 0

நடிகையும், மொடலுமான பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் சொகுசு வாகனம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு விசாரணை நடத்தி வருகின்றது.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சொகுசு வாகனம் ஒன்றை பியூமி ஹன்சமாலி கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சொகுசு வாகனத்தை கொள்வனவு செய்ய செலவிடப்பட்ட பணம் தொடர்பிலும்  பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பிலும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு விசாரணை நடத்தி வருகின்றது.

இது தொடர்பான விசாரணைகளுக்காக பியூமி ஹன்சமாலி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் நேற்று (04) முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது, நடிகையும், மொடலுமான பியூமி ஹன்சமாலி சுமார் 9 மணிநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.