தம்புள்ளையில் அனுமதிப்பத்திரமின்றி இறைச்சி விற்பனை செய்தவர் கைது

23 0

தம்புள்ளை நிக்கவட்டவன பிரதேசத்தில் பல வருடங்களாக அனுமதிப்பத்திரமின்றி மாடுகள் மற்றும் கால்நடைகளை கொன்று இறைச்சியாக்கி விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளதாக  தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தம்புள்ளை பிரதேச  சபையினால் அங்கீகரிக்கப்பட்ட கடை என்ற போர்வையில் நடத்தி வந்த மாட்டிறைச்சி கடை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சுற்றிவளைப்பின் போது, மாட்டிறைச்சி கடைக்கு அருகில் உள்ள களஞ்சியசாலை அறையில், குளிர்சாதனப் பெட்டிகளில் இருந்து மூவாயிரம் கிலோவுக்கும் அதிகமான மாட்டிறைச்சி மீட்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.