தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையொப்பம்!

40 0

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக யாழ் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும்  வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையொப்பமிட்டனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.