பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இன்று (5) கூடியது.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக 11 பேர் கொண்ட நியமனக்குழுவை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு நியமித்திருந்தது.
இந்நிலையில் அக்குழு இன்று காலை 11 மணியளவில் வவுனியாவில் கூடியுள்ளது.
இதன்போது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக இன்றே இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கலந்துரையாடலில் நியமனக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.