கொழும்பில் இளைஞன் அடித்து கொலை ; சந்தேக நபர் கைது

24 0

கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக இளைஞன் ஒருவன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (04) மாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பு, வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

தனிப்பட்ட தகராறு காரணமாக சந்தேக நபர்கள் சிலர் இணைந்து இந்த இளைஞனை அடித்து காயப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, காயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.