பிரபலமான மொபைல் பிராண்டான OnePlus ஸ்மார்ட்போன்கள் மீண்டும் ஜேர்மனியில் விற்பனைக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. இது அந்த நிறுவனத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தடை ஒரு காப்புரிமை விவகாரத்தைத் தொடர்ந்து விதிக்கப்பட்டத்து. இதனால் OnePlus நிறுவனத்தை ஜேர்மனியில் தற்காலிகமாக விற்பனை நிறுத்த வேண்டியுள்ளது.
2024-ஆம் ஆண்டு ஜனவரியில், ஜேர்மனி சந்தைக்கு திரும்பிய OnePlus நிறுவனம், கடந்த இரண்டு ஆண்டுகளில் Nokia-வுடன் ஏற்பட்ட காப்புரிமை விவகாரம் காரணமாக சில பிரச்சனைகளை சந்தித்தது.
அதேபோல, தற்போது InterDigital என்ற நிறுவனத்துடனான காப்புரிமை விவகாரம் காரணமாக ஜேர்மனியில் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த காப்புரிமை மோதல் 5G மற்றும் மொபைல் தொழில்நுட்பங்களைச் சேர்ந்த முக்கிய காப்புரிமைகளைச் சுற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக, OnePlus ஸ்மார்ட்போன்கள் அதன் ஜேர்மன் ஓன்லைன் கடையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், OnePlus Pad 2 மற்றும் OnePlus Watch 2 போன்ற பிற சாதனங்கள் இணையத்தளத்தில் தொடர்ந்து கிடைக்கின்றன.