சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் அம்பாறையில் இடம்பெற்ற கலந்துரையாடல்

39 0

அம்பாறை மாவட்ட சிவில் அமைப்பின் ஏற்பாட்டில், தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சி பிரதிநிதிகளுடன், பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல், நேற்றையதினம் (03.10.2024) காரைதீவு பொது நூலக கட்டிடத்தில் நடைபெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில், இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஜனநாயக முன்னணி , ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் பங்குபற்றியிருந்தனர்.இன்றைய கூட்டத்தில் பங்குபற்றிய கட்சிகளின் பிரதிநிதிகள், அம்பாறை மாவட்ட நிலைமையில் ஓரணியில் போட்டியிட வேண்டும் எனும் கோரிக்கைக்கு தமது சம்மதத்தை தெரிவித்திருந்ததுடன், இன்றைய கூட்டம் தொடர்பாக தமது கட்சி தலைமைகளுக்கு தெரியப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

கொள்கை அளவில் இணங்கிய தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் பொதுத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.