இலங்கைக்கு கனடா ஊக்கமளிக்கிறது – ஸ்ரெஃபன் டியோன்

430 0

1469608556_1479637_hirunews_1469586074_3890220_hirunews_vஇலங்கையில் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்கும், பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தவும் கனடா ஊக்கமளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஸ்ரெஃபன் டியோன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அனைத்து சமுகங்களும் சமாதானத்துடனும், பாதுகாப்புடனும் வாழ்வதற்கான அனைத்து செயற்பாடுகளுக்கும் உதவியளிக்க கனடா தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் சர்வதேசத்திடம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும்.

இதற்கும் கனடா ஒத்துழைப்பு வழங்கும்.

இந்த விடயங்கள் தொடர்பில் தாம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் போது அவதானம் செலுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் இன்று இரவு இலங்கை வரவுள்ள நிலையில், நாளை முதல் பல்வேறு உயர் மட்ட சந்திப்புகளை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.