யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (03) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மழை காலம் வருவதனால் டெங்கு நோய் வராமல் தடுப்பதற்குரிய வழிவகைகள் ஆராயப்பட்டு கலந்துரையாடலில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சமன் பத்திரண, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை செயலாளர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.