அம்பாந்தோட்டையில் காட்டு யானை தாக்கி பெண் பலி

34 0

அம்பாந்தோட்டை மத்தல, அலுத்கம்ஆர, அனுக்கங்கல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்தல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளது.

தணமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும்போது வீதியிலிருந்த காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திலிருந்த கணவன் உயிரைப் பாதுகாப்பதற்காக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக மத்தல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.