வெளிநாட்டு சிகரட்களை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்ற இருவர் கைது !

19 0

இலங்கைக்கு கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரட்களை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை  பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்  சந்தேக நபர்கள் இருவரும்  கல்முனை பகுதியில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 20,000 சிகரெட்டுகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி சுமார் 30 இலட்சம் ரூபா என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.