அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்ஹேன்கொட பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த வயதான தம்பதி இன்று (04) காலை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தக் காயங்களுடன் ஒருவர் வீடொன்றில் வீழ்ந்துக் கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவத்தில் 67 வயதுடைய ஆணும் 63 வயதான பெண்ணும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் குறித்து நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.
கொலைக்கான காரணமோ, சந்தேகநபர்கள் தொடர்பிலோ இதுவரை தகவல் வெளியாகவில்லை.
அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.