ரணில் ஒருபோதும் விடுபாட்டுரிமையை கோரவில்லை!-தனுஸ்க ரமநாயக்க

40 0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் விடுபாட்டுரிமையை கோரவில்லை என ஜனாதிபதி   ஊடகபிரிவின் முன்னாள்பணிப்பாளர் நாயகம் தனுஸ்க ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி விடுபாட்டுரிமையை கோரவேண்டிய அவசியமில்லை,அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பது போல முன்னாள் ஜனாதிபதி ஒருபோதும் விடுபாட்டுரிமையை கோரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நீதித்துறையின் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது,எந்த சம்பவம் தொடர்பிலும் நீதி வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு அவ்வேளை  விடுபாட்டுரிமை காணப்பட்டதால் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த விசாரணை உரிய முறையில் இடம்பெறவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தெரிவித்துள்ளதை அவர் நிராகரித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சரின் கருத்துக்கள் தவறானவை பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படுவதை தவிர்ப்பதற்காக அது குறித்த தெளிவுபடுத்தல்கள் அவசியம்  என ஜனாதிபதியின்  முன்னாள் ஊடகபிரிவின் பணிப்பாளர் நாயகம் தனுஸ்க ரமநாயக்க தெரிவித்துள்ளார்.