குற்றச்செயல்கள் குறித்த விசாரணைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது ஏன்?

30 0

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற மிக முக்கியமான குற்றச்செயல்கள் குறித்த விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்  ரவிசெனிவிரட்ண தலைமையில் நேற்று  விசேட கூட்டமொன்று இடம்பெற்றது என தெரிவித்துள்ள பொலிஸ் ஊடக பிரிவு நாட்டில் இடம்பெற்ற முக்கியமான குற்றச்செயல்கள், மோசடிகள்,ஏனைய விசேட குற்றங்கள் குறித்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து  ஆராயப்பட்டதாக தெரிவித்துள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபரும்,பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் சிஐடி அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

தொடரும் விசாரணைகள்,தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விசாரணைகள் ,மேலும் இந்த விசாரணைகள் நிறுத்தப்படுவதற்கு அரசியல் தலையீடுகளே காரணமா எனவும் ஆராயப்பட்டதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேவையற்ற விதத்தில் தாமதமாக்கப்பட்ட விசாரணைகள்,குறித்தும் புதிதாக விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டுமா என்பது குறித்தும் ஆராயப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.